தமிழக முஸ்லிம் உம்மத்தில் ஷரீஅத்தைப் படித்த சர்வதேச
ஞானமுடைய
அறிவு ஜீவிகள், சட்ட வல்லுனர்கள்,ஆட்சிப்பணியாளர்கள், இதழியலாளர்கள், இளம் தொழில் முனைவோர் ஆகியோரை உருவாக்க வேண்டும் என்ற
தொலைநோக்கு இலக்குடன் உருவாகிவரும் பைத்துல் ஹிக்மா கல்வி நிறுவனத்தின்
கட்டிடப்பணிகள் சென்ற ஆண்டு பிப்.16
அன்று துவங்கப்பட்டது.
மிகச் சரியான இலக்கு நிர்ணயிக்கப்பட்ட சேவை மனப்பான்மையுடைய ஒரு கல்வி நிறுவனம் சமூகத்தை புரட்டி போட்டுவிடும் என்பதை வரலாற்றை ஆழ்ந்து வாசிப்பவர்களால் மட்டுமே உணர முடியும்.
வாழ்வின் எந்த ஒரு நிகழ்வையும் வரலாற்றுப் பின்புலத்தில் உள்வாங்கும் மரபை அல்குர்ஆனும் ஹதீஸும் நமக்கு கற்றுத்தருகிறது. அந்த மரபை சமீபகாலத்தில் மறந்துபோன இன்றைய முஸ்லிம் சமூகம் பைத்துல் ஹிக்மா போன்ற கல்வி நிறுவனம் எதிர்காலத்தில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை இன்னமும் சரியாக புரிந்து கொள்ளவில்லை.
புரிந்து கொண்ட சமுதாய புரவலர்கள் பெரியவர்கள் சமூக ஆர்வலவர்கள் தங்களது சக்திக்கு மீறி உதவி செய்கின்றனர். புரியாதவர்களுக்கு புரியவைத்து புரியவைத்து கட்டிப் பணிகளுக்கான உதவிகளை பெற்று வருகிறோம்.
எதையும் புரிந்து கொள்ள மறுப்பவர்கள் தூற்றுகின்றனர் அல்லாஹ்வின் எச்சரிக்கையை மீறி அவதூறுகளை பரப்புகின்றனர். அவர்களின் சந்ததிகளுக்கான உழைப்பு இது என்பதையும் புரிந்து கொள்ளவில்லை.
கடந்த காலங்களில் உம்மத்தின் மேன்மைக்காக உழைத்தவர்களை உம்மத்தின் சிலர் அனுகிய விதத்தை அறிந்தவர்களுக்கு ” அவதூறுகளை பரிசாக பெறாத சமூக உழைப்பு போலியானது ” என்பது புரியவரும்.
– CMN SALEEM