தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கம் பாண்டிச்சேரியில் உருவாக்கி வரும் வரலாற்றுச் சிறப்புமிக்க பைத்துல் ஹிக்மா கல்வி நிறுவனத்தின் முதல் நிறுவனமான ஜாமிஅத்துல் ஹிக்மா அரபிக் கல்லூரியின் இரண்டாம் ஆண்டு துவக்க நிகழ்ச்சி 16 – 6- 2019 ஞாயிறு அன்று சிறப்பாக நடைபெற்றது.
ஜாமிஅத்துல் ஹிக்மா அரபிக்கல்லூரியின் முதல்வர், மூத்த மார்க்க அறிஞர்,
மெளலானா முகம்மது கான் பாக்கவி அவர்கள் இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு பாடம் சொல்லிக் கொடுத்து வகுப்பை துவங்கி வைத்தார்கள்.
நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு அறிவுத் தகுதியுடைய மாணவர்கள் மட்டும் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இதில் ஆதரவற்ற பிள்ளைகள் உள்ளிட்ட உம்மத்தின் அனைத்துத் தரப்பு பிள்ளைகளும் அடங்குவர். இவர்கள் 7 ஆண்டுகள் முடிவில் ஆலிமியத் படிப்பை முடிக்கும் போது மத்திய அரசின் NIOS வாரியத்தில் ஆங்கில வழியில் 12 ஆம் வகுப்பு தேர்வையும் எழுதி முடிப்பார்கள்.
பொதுநிதியிலிருந்து தான் கல்வி வழங்கப்பட வேண்டும் என்பது இஸ்லாமிய வழிமுறை. சமுதாயத்திற்கு தேவையான அறிவுப் போராளிகளை சமுதாயம் தன் செலவில் தான் உருவாக்க வேண்டும்.
ஜாமிஅத்துல் ஹிக்மா அரபிக் கல்லூரியில் பயிலும் மாணவர்களின் கல்வி உணவு தங்குமிடம் ஆகியவற்றுக்கு கட்டணம் கிடையாது.