இலக்கை நினைவூட்டும் இரண்டாம் கட்ட பயிலரங்கம்

தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கத்தின் பதினைந்து ஆண்டுகால கனவை நினைவாக்கியது கடந்த 2019 ஏப்ரல் 1 முதல் 14 வரை 12 ம் வகுப்பு முடித்தவர்களுக்கான நாளைய தலைவர்கள் கோடைகால பயிற்சி முகாம்.

அந்த முகாமோடு கல்வி இயக்கத்தின் கடமை முடிந்துவிடவில்லை அவர்களின் கல்வி காலம் முடியும் வரை அவர்களுக்கு முறையான வழிகாட்டுதலை ஏற்படுத்தி..
அவர்கள் இந்த சமூகத்திற்கும் முழு உலகிற்கும் வழி நடத்தும் பொறுப்பை அடைவதற்கு துணை நிற்பது என்று அவர்களின் வகுப்பின் இறுதியிலே அறிவித்திருந்தோம் அதை நிறைவேற்றும் வகையில் இலக்கை நினைவூட்டும் இரண்டாம் கட்ட பயிலரங்கம் மற்றும் கலந்தாய்வு கூட்டம் 14_3_2020 அன்று பைத்துல் ஹிக்மா வளாகத்தில் நடைபெற்றது.

சமூக நீதி முரசின் துணை ஆசிரியர் வலியுல்லாஹ் ஸலாஹி மணவர்களுக்கான உளதூய்மை வகுப்பு எடுத்தார்கள். உயர்கல்வி ஆலோசகர் முஹம்மது இஸ்மாயில் மாணவர்களுடன் அவர்களின் கல்லூரி அனுபவங்கள் மற்றும் எதிர் கால இலக்குகள் குறித்து கலந்துரையாடினார். கல்வி இயக்க ஒருங்கிணைப்பாளர் கா.பைசல் அஹமது வாசிப்பின் அவசியம் குறித்து வகுப்பு எடுத்தார்.

இறுதியாக சகோதரர் CMN சலீம் அவர்கள் வீடியோ கான்ஃப்ரன்ஸ் மூலம் மாணவர்களின் எதிர்கால இலக்கு அவர்களுக்கான பொறுப்புகள் கடமைகள் அவர்களுக்கான செயல்திட்டங்கள் குறித்து விரிவாக எடுத்துரைத்தார்கள்.

மாணவர்கள் பைத்துல் ஹிக்மா வளாகத்தில் தாங்கள் தாங்கி சென்ற கல்வியை அவர்கள் உள்ளத்தில் தாங்கி பிடித்திருப்பதும் அதில் தெளிவோடு இருப்பதும் மிகப்பெரிய நம்பிக்கையை நமக்கு ஏற்படுத்தியது.

அல்ஹம்துலில்லாஹ்