12 நாள் தலைமைத்துவ பயிலரங்கம் நிறைவடைந்தது

தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கம் சார்பில் பைத்துல் ஹிக்மாவில் ஏற்பாடு செய்திருந்த 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான 12 நாள் தலைமைத்துவ பயிலரங்கம் நிறைவடைந்தது.

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

நாளையத் தலைவர்களான இவர்களுக்கு இவர்களின் ஆர்வத்திற்கேற்ற வாழ்வியல் இலக்கு முன்வைக்கப்பட்டுள்ளது.

வெறும் பட்டதாரிகளாக நின்றுவிடாமல் நாட்டின் முதன்மையான அறிவியல் ஆராய்ச்சியாளர்களாக உருவாகும் பயிற்சியும் அளிக்கப்பட்டுள்ளது.

இன்று 16 வயதில் இருக்கும் இவர்களின் அடுத்த 10 ஆண்டுகளுக்கான கல்விப்பயணம் குறித்த தெளிவான திட்ட வரைபடமும் வழங்கப்பட்டுள்ளது.

எல்லாவற்றுக்கும் மேலாக மனித வெற்றியின் மூலாதாரமாக இருக்கும் ஆன்மிகப் பயிற்சிகளுடன், இயற்கை வாழ்வு, மரபு உணவுகள் குறித்த பண்பாட்டுப் பயிற்சிகளும் அளிக்கப்பட்டுள்ளன.

அல்ஹம்துலில்லாஹ்….

Leave a Reply