தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கத்தின் சார்பில் 10,12 ஆம் வகுப்பு தேர்வெழுதியுள்ள மாணவர்களுக்கான தலைமைத்துவ பயிலரங்கம் 4 ஆவது ஆண்டாக ஏப்ரல் 15 – 30 வரை 15 நாட்கள் பைத்துல் ஹிக்மா வளாகத்தில் நடைபெற உள்ளது.
முஸ்லிம் ஆண் பிள்ளைகளின் உயர்கல்வியில் அவர்களின் விருப்பத்தினூடாக அறிவாற்றலையும் பொருளாற்றலையும் அடையும் வகையில் இலக்கு நிர்ணயித்து கல்வி காலம் முழுமைக்கும் பயிற்சியளிப்பது தான் இந்தப் பயிலரங்கத்தின் நோக்கம்.
கடந்த காலங்களில் இந்தப் பயிலரங்கில் கலந்துகொண்ட மாணவர்கள் வியக்கத்தக்க வகையில் தங்களது இலக்கை நோக்கி பயணிக்கின்றனர்.
அடுத்த தலைமுறைக்கு மிகச்சரியாக வழிகாட்டுவதின் மூலம் இன்ஷா அல்லாஹ் உம்மத்தில் பெரும் மாற்றங்களை மிக விரைவாக கொண்டு வர முடியும்.
இந்த ஆண்டு 10,12 ஆம் வகுப்பு தேர்வெழுதியுள்ள மாணவர்களுக்கும் அவர்களின் பெற்றோர்களுக்கும் இந்தப் பயிலரங்கம் குறித்த செய்தியை கவனப்படுத்துங்கள்.
முன்பதிவு கட்டாயம் : https://forms.gle/gszNayzXZpTn7LJP7