இன்றைய முஸ்லிம் சமூகத்தி்ன் பொருளாதார வளர்ச்சிக்கு இஸ்லாமிய நிதியியல் (Islamic Finance) படிப்பும் அதில் ஆராய்ச்சியும் மிகவும் அவசியமாக இருக்கிறது. இந்த படிப்பு தமிழக பல்கலைக்கழகங்களில் இல்லை.
அரபுநாடுகள் மலேசியா இந்தோனேசியா அமெரிக்க ஐரோப்பிய நாடுகளில் ஏராளமானவர்கள் இஸ்லாமிய நிதியியல் துறையில் பட்டம் பெற்று ஆராய்ச்சிப் படிப்பை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்திய மற்றும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு ஹலால் முதலீடுகள் மற்றும் பங்கு வர்த்தகம் குறித்த ஆலோசனைகளை அவர்கள் தான் வழங்குகின்றனர்.
இந்திய பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள 54 % நிறுவனங்கள் ஹலால் பங்குகளை வழங்குகின்றன.
ஹலால் பங்குகளில் உள்நாட்டு வெளிநாட்டு முஸ்லிம்களின் முதலீடுகள் அதிகரிக்கிறது என்பதாற்காக பல இந்திய நிறுவனங்கள் தங்களது தொழில் முறைகளை ஷரிஆ ஆலோசனை வட்டத்துக்குள் கொண்டு வந்துள்ளன.
தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கம் ஏற்பாடு செய்துள்ள இந்த ஒருநாள் பயிலரங்கம் இஸ்லாமிய நிதியியல் மற்றும் இந்திய சவூதி ஹலால் பங்குச்சந்தை குறித்த அடிப்படையான புரிதலை வழங்கும்.
முன்பதிவு செய்வதற்கு நாளை கடைசிநாள்.
முன்பதிவுக்கு : 97892 34073