


ஷரீஅத்தை முறைப்படி கற்ற ஆலிம்களை சட்ட வல்லுனர்களாகவும், இந்திய ஆட்சிப்பணிக்கும் இடைவெளியின்றி உருவாக்க வேண்டும் என்ற உயர்வான இலக்குடன், தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கம் புதுச்சேரி மாநிலம் கடுவனூரில் கட்டமைத்து வரும் பைத்துல் ஹிக்மா கல்வி வளாகத்தின் முதல் நிறுவனமான ஜாமிஅத்துல் ஹிக்மா அரபிக் கல்லூரியின் முதலாவது பட்டமளிப்பு விழா பிப். 1 அன்று நடைபெற்றது.
இந்நிகழ்வில் தமிழ்மாநில ஜமாஅத்துல் உலமாவின் ஆளுமை மிக்க தலைவர் மௌலானா P.A. காஜா மொயீனுத்தீன் பாக்கவி அவர்கள் மற்றும் மேனாள் மாவட்ட நீதிபதி அ. முஹம்மது ஜியாவுதீன் அவர்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு மாணவர்களை வாழ்த்தினர்.
அல்லாஹ்வின் கருணையால், தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கம் தொடர்ச்சியாக முன்வைத்து வரும் உயர்கல்வி இலக்கின் அடையாளங்கள் இன்று நடைமுறையில் உருவாகத் துவங்கியுள்ளன.
அல்ஹம்துலில்லாஹ்!

