தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கத்தின் ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்

தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கத்தின் ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் புதுச்சேரி பைத்துல் ஹிக்மா வளாகத்தில் 28-8-22 ஞாயிற்றுக் கிழமை நடைபெற்றது.

” தமிழக முஸ்லிம்களின் ஆரம்பக்கல்வி முதல் ஆய்வுக்கல்வி வரை இஸ்லாமியப் பாடங்கள் இணைக்கப்பட வேண்டும் “

இந்த தொலைநோக்கு இலக்கை மையப்படுத்தி கல்வி பொருளாதாரம் ஆகிய இரண்டு தளங்களில், அதன் வேர்களிலும் கிளைகளிலும் சமூகத்தை அதிகாரப்படுத்தும் பெரும் பணியினை தன்னார்வத்துடன் செய்து வருகிறோம்.

ஆராவாரமில்லாத, அருள்நிறைந்த இந்தப் பணிகளில் தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கத்துடன் இணைந்து தமிழகம் முழுவதும் பணியாற்றி வரும் சகோதர சகோதரிகள் இந்த ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்திற்கு அழைக்கப்பட்டிருந்தனர்.

கல்வி பொருளாதாரம் இந்த இரண்டு துறைகளிலும் சமூகத்திற்கு வழிகாட்டக்கூடிய முழுநேர பயிற்சியாளர்களை உருவாக்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

முஸ்லிம் சமுதாயத்தை ஆற்றல்படுத்தும் இந்தப் பணிகளில் தொலைநோக்கோடும் தன்னார்வத்துடனும் இயங்கும் தகுதியைப் பெற்றவர்கள் தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கத்துடன் இணைந்து பணியாற்றலாம்.

களப்பணியாற்ற இயலாத சூழலில் இருப்பவர்கள் பொருளுதவி செய்யலாம்.