வணிக சாம்ராஜியம் – இரண்டு நாள் பயிலரங்கம்

இன்றைய உலகில்,தொழில் ஈடுபாடும் தேடலும் உள்ள ஒரு மனிதனால் தன் தொழில் வளர்ச்சிக்கான அறிவையும் வழிகாட்டுதலையும் மிக எளிதாக பெற்றுக் கொள்வதற்கு ஏராளமான வாய்ப்புகள் இருக்கிறது.

ஆனால் அறிவைக் காட்டிலும் அவனது குணமும் அணுகுமுறையும் தொலைநோக்கு இலக்கும் தான் தொழில் வெற்றிக்கான அடிப்படை காரணிகளாக இருக்கின்றன.

வணிக சாம்ராஜ்யம் என்ற தலைப்பில் உம்மத்தில் படித்த இளைஞர்கள் மற்றும் இளம் தொழில்முனைவோருக்கு இஸ்லாமிய வணிக உளவியல் மற்றும் இலாபகரமான நவீன உற்பத்தி தொழில்கள் குறித்தும் பயிற்சியளிக்கும் இரண்டு நாள் பயிலரங்கம் பைத்துல் ஹிக்மா வளாகத்தில் நடைபெற்றது.

உற்பத்தி (Manufacturing) சார்ந்த வணிக சாம்ராஜ்யம் என்பதே இளம் தொழில்முனைவோரின் இலக்கு என்ற கருத்து ஆழமாக விதைக்கப்பட்டது.