உம்மத்திலிருந்து தலைசிறந்த சட்ட வல்லுநர்களை அதிக எண்ணிக்கையில் உருவாக்கும் தொலைநோக்கு திட்டங்களை தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கம் செயல்படுத்தி வருகிறது.
சட்டம் படித்துக் கொண்டிருக்கும் மாணவர்களுக்கு வல்லுனர்களின் தொடர்ச்சியான வகுப்புகள் பயிலரங்கம் வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
அதன் ஒரு பிரிவாக சர்வதேச சட்டத்தில் மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சிக் கல்வியை முன்னெடுக்கும் கல்வித் தகுதியும் ஆர்வமும் நிறைந்த மாணவர்களில், ஆரம்பமாக ஓரிருவரை மட்டும் தேர்வு செய்து அவர்களை லண்டனில் உள்ள சிறந்த பல்கலைக்கழகங்களில் படிக்க வைத்து உருவாக்கும் முயற்சியை (Pilot Program) தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கம் முன்னெடுத்துள்ளது.
சர்வதேச சட்டத்தில் பட்ட மேற்படிப்பு என்ற இரண்டாண்டுகள் கல்வி காலத்தை கொண்ட இந்த திட்டத்தில் மாணவர்கள் ஓராண்டு புதுச்சேரி பைத்துல் ஹிக்மாவிலும் ஓராண்டு லண்டனிலும் படிப்பார்கள். அதன் பிறகு ஆராய்ச்சிக் கல்வியை (PhD) முன்னெடுப்பார்கள்.
இதற்கான நேர்முகத்தேர்வுகள் இன்ஷா அல்லாஹ் நாளை (20-4-2024 சனிக்கிழமை) காலை 9 மணிக்கு பைத்துல் ஹிக்மாவில் நடைபெறுகிறது.
சட்டப் ப்படிப்பை முடித்துள்ள,சமூக அக்கறையுள்ள, கூடுதல் மதிப்பெண் சதவிகிதத்தை கொண்டுள்ள மாணவர்கள் மட்டும் முன்பதிவு செய்து கலந்து கொள்ளவும்.
முன்பதிவுக்கு : 89391 97652