



தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கத்தின் சார்பில் அடுத்த தலைமுறை பிள்ளைகளுக்கு உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி ரீதியாக இலக்கு நிர்ணயிக்கும் தலைமைத்துவ பயிலரங்கம் பைத்துல் ஹிக்மாவில் துவங்கியது.
வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத வகையில் கவனச்சிதைவுக்கு உள்ளாக்கப்படும் இன்றைய இளம் தலைமுறையை ஒரு உயர்வான இலக்கை நோக்கி கூர்மைப்படுத்துவது பெரும் சவாலாக இருக்கிறது.
ஆன்மிகப் பின்புலத்திலான உயர்கல்வியும் ஆராய்ச்சியும் தான் முஸ்லிம் உம்மத்தை அதிகாரப்படுத்தும் என்பதை இவர்கள் புரிந்து கொண்டால் மகத்தான மாற்றங்கள் உண்டாகும்.

