தமிழக முஸ்லிம்களிடையே முதன்முறையாக இஸ்லாமிய நிதியியல் மற்றும் ஹலால் பங்குச்சந்தை முதலீடுகள் குறித்த ஒருநாள் வகுப்பு பைத்துல் ஹிக்மாவில் நடைபெற்றது. இந்திய பங்குச் சந்தையில் ஷரீஅத் வகைக்கு உட்பட்ட பங்குகளை எதன் அடிப்படையில் தரம் பிரிப்பது,அதற்கு அறிஞர்களின் வழிகாட்டுதல் என்ன என்பது குறித்து மெளலவி உமர் ஹஸனி அவர்கள் வகுப்பெடுத்தார்கள். முதலீடுகள்,நிதி மேலாண்மை,அதற்கான திட்டமிடல் குறித்து நிதித்துறை வல்லுனர் சகோதரர் இம்தியாஸ் அவர்கள் வகுப்பெடுத்தார்கள். சவூதி அரேபிய பங்குச் சந்தையில் முதலீடு செய்யும் வழிமுறைகள் குறித்து சவூதி...Read More
இன்றைய முஸ்லிம் சமூகத்தி்ன் பொருளாதார வளர்ச்சிக்கு இஸ்லாமிய நிதியியல் (Islamic Finance) படிப்பும் அதில் ஆராய்ச்சியும் மிகவும் அவசியமாக இருக்கிறது. இந்த படிப்பு தமிழக பல்கலைக்கழகங்களில் இல்லை. அரபுநாடுகள் மலேசியா இந்தோனேசியா அமெரிக்க ஐரோப்பிய நாடுகளில் ஏராளமானவர்கள் இஸ்லாமிய நிதியியல் துறையில் பட்டம் பெற்று ஆராய்ச்சிப் படிப்பை முன்னெடுத்து வருகின்றனர். இந்திய மற்றும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு ஹலால் முதலீடுகள் மற்றும் பங்கு வர்த்தகம் குறித்த ஆலோசனைகளை அவர்கள் தான் வழங்குகின்றனர். இந்திய பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள 54 %...Read More
புதுச்சேரி பைத்துல் ஹிக்மா வளாகத்தில் இயங்கிவரும் ஜாமிஅத்துல் ஹிக்மா அரபிக் கல்லூரியில் தேசிய அரசியலமைப்பு தினம் (National Constitution Day) விழா நடைபெற்றது. இந்திய அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கிய அரசியல் நிர்ணய சபையில் நடைபெற்ற முக்கிய விவாதங்களை ஆலிமியத் கல்வி பயிலும் மாணவர்கள் அப்படியே காட்சிப்படுத்தினர். மாதிரி நீதிமன்றமும் (Moot Court ) நடைபெற்றது. மூன்று வழக்கறிஞர்கள் நீதிபதிகளாக அமர்ந்திருக்க மாணவர்கள் இரண்டு முக்கிய வழக்குகளை எடுத்து விவாதித்தனர். Aalim + Advocate என்பது தான் ஜாமிஅத்துல்...Read More
இஸ்லாமியக் கல்விமுறை வரலாறு கலாச்சார மரபுகள் உள்ளிட்டவற்றின் பின்புலத்தில் இன்றைய முஸ்லிம்களுக்கான இலக்கு குறித்து துல்லியமாக அறிந்த கல்வியாளர்களை மஹல்லாக்கள் தோறும் உருவாக்கும் பயிலரங்கம் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன. தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கம் சார்பில் ” இஸ்லாமிய நாகரிகம் ” என்ற தலைப்பில் இரண்டுநாள் பயிலரங்கம் புதுச்சேரி பைத்துல் ஹிக்மாவில் நடைபெற்றது. கல்விப் பணிகளின் மூலமாக மட்டுமே முஸ்லிம்களை அதிகாரப்படுத்த முடியும். அறிவுத்தேடல் ஆராய்ச்சி செய்தல் புதிய கண்டுபிடிப்புகள் உள்ளிட்ட அறிவுசார் முயற்சிகள் மீது ஈர்ப்பு...Read More
முஸ்லிம்களின் வரலாறு வாழ்வியல் மரபுகள் நிகழ்கால சிக்கல்கள் மற்றும் எதிர்கால இலக்குகள் குறித்த இரண்டுநாள் பயிலரங்கம் புதுச்சேரி பைத்துல் ஹிக்மாவில் செப்டம்பர் 21,22 ஆகியத் தேதிகளில் நடைபெற உள்ளது. இது அறிஞர்களையும் இளம் தலைவர்களையும் உருவாக்கும் பயிலரங்கம். இஸ்லாமிய வரலாற்றுத் தொடர்புகளுடன் கூடிய வழிகாட்டுதல் மூலமாக முஸ்லிம் சமூகத்தில் நம்பிக்கையை விதைத்து வளரும் தலைமுறைக்கு மிகச்சரியான இலக்கை நிர்ணயிக்க முடியும். ஆர்வமுள்ள ஆலிம்கள்,ஆலிமாக்கள்,ஆசிரியர்கள்,வரலாறு மற்றும் சட்டத்துறை மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் ஆகியோர் முன்பதிவு செய்து கலந்து கொள்ள...Read More
உம்மத்தின் மீதான ஆதங்கமும் கவலையும் கொண்ட மேடைப்பேச்சுக்கள் மக்களின் கவனத்தை மட்டுமே ஈர்க்கும். கூர்மையான இலக்குடன் இளையத் தலைமுறையை வார்த்தெடுக்கும் திட்டமிட்ட முயற்சிகள் தான் உம்மத்தில் நிலையான மாற்றங்களை கொண்டு வரும். தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கத்தின் பெரும் முயற்சிகளினால்….. ஆண் பிள்ளைகள் ஆய்வாளர்களாக உருவாகி வருகின்றனர். பெண் பிள்ளைகள் கல்வியாளர்களாக உருவாகி வருகின்றனர். இவர்களே… நாளைய நம்பிக்கைகள்.Read More
தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கத்தின் சார்பில் 10,12 ஆம் வகுப்பு தேர்வெழுதியுள்ள மாணவர்களுக்கான தலைமைத்துவ பயிலரங்கம் 4 ஆவது ஆண்டாக ஏப்ரல் 15 – 30 வரை 15 நாட்கள் பைத்துல் ஹிக்மா வளாகத்தில் நடைபெற உள்ளது. முஸ்லிம் ஆண் பிள்ளைகளின் உயர்கல்வியில் அவர்களின் விருப்பத்தினூடாக அறிவாற்றலையும் பொருளாற்றலையும் அடையும் வகையில் இலக்கு நிர்ணயித்து கல்வி காலம் முழுமைக்கும் பயிற்சியளிப்பது தான் இந்தப் பயிலரங்கத்தின் நோக்கம். கடந்த காலங்களில் இந்தப் பயிலரங்கில் கலந்துகொண்ட மாணவர்கள் வியக்கத்தக்க வகையில்...Read More
தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கத்தின் சார்பில் உருவாக்கப்பட்டு வரும் பைத்துல் ஹிக்மாவில் அமைந்துள்ள ஜாமிஅத்துல் ஹிக்மா அரபிக் கல்லூரியின் 6ஆம் ஆண்டு நிறைவு மற்றும் பரிசளிப்பு விழா நடைபெற்றது. 7ஆண்டுகள் மரபுவழி மதரஸா கல்வி கற்கும் இந்த இளம் ஆலிம்கள் உயர்கல்வியில் சட்டம் ஆட்சிப்பணி இதழியல் ஆகிய அதிகாரமிக்க துறைகளை இலக்காக கொண்டு படித்து வருகின்றனர். இவ்விழாவில் ஜாமிஆவின் 7ஆம் ஆண்டு மாணவர்கள், நெதர்லாந்தில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தில் (ICJ) நடைபெற்ற தென்அமெரிக்க நாடுகளின் சுற்றுச்சூழல் தொடர்பான...Read More
தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கம் சார்பில் புதுச்சேரி – கடுவனூரில் அமைந்துள்ள பைத்துல் ஹிக்மா கல்வி வளாகத்தில் இயங்கி வரும் ஜாமிஅத்துல் ஹிக்மா அரபிக் கல்லூரியின் 2024 – 25 கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு இன்று நடைபெற்றது.Read More
உம்மத்திலிருந்து தலைசிறந்த சட்ட வல்லுநர்களை அதிக எண்ணிக்கையில் உருவாக்கும் தொலைநோக்கு திட்டங்களை தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கம் செயல்படுத்தி வருகிறது. சட்டம் படித்துக் கொண்டிருக்கும் மாணவர்களுக்கு வல்லுனர்களின் தொடர்ச்சியான வகுப்புகள் பயிலரங்கம் வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பிரிவாக சர்வதேச சட்டத்தில் மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சிக் கல்வியை முன்னெடுக்கும் கல்வித் தகுதியும் ஆர்வமும் நிறைந்த மாணவர்களில், ஆரம்பமாக ஓரிருவரை மட்டும் தேர்வு செய்து அவர்களை லண்டனில் உள்ள சிறந்த பல்கலைக்கழகங்களில் படிக்க வைத்து உருவாக்கும் முயற்சியை...Read More
Recent Comments