March 2023

Month

தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கத்தின் சார்பில் 12 ஆம் வகுப்பு தேர்வெழுதிய மாணவர்களுக்கான தலைமைத்துவ பயிலரங்கம் ஏப்ரல் 29 – மே 14 வரை (15 நாட்கள்) புதுச்சேரி பைத்துல் ஹிக்மா வளாகத்தில் நடைபெற உள்ளது. இஸ்லாமிய வணக்க வழிபாடுகளில் பேணுதலுடைய, உயர்கல்வியிலும் வாழ்விலும் மிகச்சரியான இலக்குடைய மாணவ சமூகம் உருவாக வேண்டும் என்பதே இப் பயிலரங்கத்தின் நோக்கம். இடவசதி குறைவாக இருப்பதால் உடன் முன்பதிவு செய்து கொள்ளுங்கள்.
Read More
தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கத்தின் சார்பில் கல்விச் சிந்தனையாளர்களை உருவாக்கும் இரண்டுநாள் பயிலரங்கம் பைத்துல் ஹிக்மாவில் நடைபெற்றது. முஸ்லிம் உம்மத்துக்கு 6 துறைகளில் பயிற்சியளிக்கும் சிறப்பு பயிற்சியாளர்களை (Trainers) உருவாக்குவதே இந்த பயிலரங்கின் நோக்கம். இஸ்லாமிய கல்வி வரலாற்றுப் பயிற்சியாளர் (Islamic Educational History Trainer) உயர்கல்வி வழிகாட்டி (Career Counselor) அறிவியல் ஆலோசகர் (Scientifc Counselor) தொழில் பயிற்சியாளர் (Business Coach) இயற்கை வாழ்வியல் பயிற்சியாளர் (Lifestyle Trainer) முனைப்படுத்தும் சொற்பொழிவாளர் (Motivational Speaker) பட்டதாரிகள்...
Read More
இஸ்லாமிய மார்க்க கல்வியை முறைப்படி கற்ற ஆலிம்களை சட்டம் ஆட்சிப்பணி இதழியல் தொழில் ஆகியத் துறைகளின் ஆளுமைகளாக உருவாக்கும் ஒற்றை இலக்குடன் உருவாக்கப்பட்டுள்ள புதுச்சேரி ஜாமிஅத்துல் ஹிக்மா அரபிக் கல்லூரியின் 5 ஆம் ஆண்டு நிறைவு விழா சிறப்பாக நடைபெற்றது. ஜாமிஆவின் இஸ்லாமிய பாடத்திட்ட குழு ஒருங்கிணைப்பாளர் மெளலவி யூசுஃப் சித்திக் மிஸ்பாஹி அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்கள். கூர்மையான இலக்கும் தொய்வில்லாத பயிற்சியுமே நம் பிள்ளைகளை ஆற்றல்படுத்தும் காரணிகள்.
Read More