Admin

By

புதுச்சேரி – கடுவனுர்,பைத்துல் ஹிக்மா வளாகத்தில் இயங்கிவரும் ஜாமிஅத்துல் ஹிக்மா அரபிக் கல்லூரியின் 2024 -25 கல்வியாண்டுக்கான விண்ணப்பங்கள் ஜனவரி 15 முதல் 25 வரை 10 நாட்கள் (காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டும்) வழங்கப்பட உள்ளன. 7 ஆண்டுகள் மதரஸா பாடத்தில் ஆலிமியத் படிப்புடன் பள்ளிப் படிப்பையும் இணைத்துப் படிக்கும் விருப்பமுள்ள 12 வயதை தாண்டாத ஆண் பிள்ளையை சேர்க்க விரும்பும் பெற்றோர்கள் மாணவருடன் நேரில் வந்து விண்ணப்பத்தை...
Read More
சட்டக் கல்வியின் ஆர்வத்தை அதிகரிக்க ஜாமிஅத்துல் ஹிக்மா அரபிக் கல்லூரி மாணவர்கள் நடத்திய மாதிரி நீதிமன்றம் (Moot Court). 7 ஆண்டுகள் மதரஸா கல்வியில் 6ஆவது ஜும்ரா பயிலும் இவர்கள் உயர்கல்வியில் சட்டப் படிப்பையும் இந்திய ஆட்சிப்பணி (IAS – IPS) தேர்வையும் எழுதுவதை இலக்காக கொண்டவர்கள்.
Read More
பைத்துல் ஹிக்மா கல்வி வளாகத்தில் மஸ்ஜிதுர் ரஹ்மத் கட்டுமானப் பணிகள் துவக்க நிகழ்ச்சி மிகச் சிறப்பாக நடைபெற்றது. மார்க்கப் பேணுதலுடைய, சமூக அக்கறையுடைய, ஆண்களும் பெண்களும் தன்னார்வத்தோடு அதிகளவில் கலந்து கொண்டு துஆ செய்தனர். கட்டிடப் பணிகள் விரைவாக முடிந்திட துஆ செய்யுங்கள்.
Read More
தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கத்தின் சார்பில் புதுச்சேரி கடுவனுரில் உருவாக்கப்பட்டு வரும் பைத்துல் ஹிக்மா கல்வி நிறுவனம் மார்க்கக் கல்வி படித்தவர்களை சட்டத் துறைக்கும் அரசுப் பணிகளுக்கும் உருவாக்கும் துல்லியமான இலக்குடன் இயங்கி வருகிறது. பைத்துல் ஹிக்மாவின் முதல் நிறுவனமான 2018 இல் துவங்கப்பட்ட ஜாமிஅத்துல் ஹிக்மா அரபிக் கல்லூரியில் 5 ஆம் ஜும்ரா ஓதிய மாணவர்கள் அனைவரும் 10 ஆம் வகுப்பு தேர்வில் வெற்றி பெற்றதற்கு பாராட்டு விழா நடைபெற்றது. இந்த பாராட்டு விழாவுடன் முஸ்லிம்...
Read More
தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கம் சார்பில் மாநிலம் தழுவிய உயர்கல்வி மாநாடு திருச்சியில் நடைபெற்றது. பல ஜூம்ஆ மேடைகளில் இது குறித்த அறிவிப்பு செய்யப்பட்டு, பல ஜமாஅத் நிர்வாகம் தங்களது மஹல்லா பிள்ளைகளை மாநாட்டுக்கு அழைத்து வருவதற்கான ஏற்பாடுகளையும் செய்திருந்தனர். தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கத்தின் துறைசார்ந்த உயர்கல்வி நெறியாளர்கள் மிகச்சிறப்பாக பயிற்சியளித்தனர். (அனைவரும் முனைவர் பட்ட (Ph.D)ஆய்வாளர்கள்) இனி வரும் காலங்களில் முஸ்லிம் பிள்ளைகள் யாராக உருவாக வேண்டும் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டு அதற்கேற்ற உயர்கல்வி படிப்புகள்...
Read More
தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கத்தின் சார்பில் 12ஆம் வகுப்பு தேர்வெழுதிய மாணவ மாணவிகளுக்கான மாநிலம் தழுவிய உயர்கல்வி மாநாடு இன்ஷா அல்லாஹ் மே18. வியாழன் காலை 9 மணி முதல் மாலை 5.30 மணி வரை திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகிலுள்ள LKS மஹாலில் நடைபெற உள்ளது. கருத்தரங்கம் – கண்காட்சி – வழிகாட்டி மய்யம் என்று உயர்கல்வியை தேர்வு செய்யும் உம்மத்தின் பிள்ளைகளுக்கான வாழ்வியல் இலக்கு நிர்ணயிக்கும் நிகழ்ச்சியாக இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது....
Read More
12 ஆம் வகுப்பு தேர்வெழுதிய மாணவர்களுக்கான 15 நாட்கள் பயிலரங்கம் பைத்துல் ஹிக்மாவில் ஏப். 29 முதல் துவங்குகிறது. உள்நாடு வெளிநாடுகளிலிருந்து பல துறை வல்லுநர்கள் வகுப்பெடுக்க உள்ளனர். அடுத்த 25 ஆண்டுகளுக்கு உங்கள் பிள்ளைகளுக்கான உயர்கல்வி மற்றும் வாழ்வியல் இலக்கை தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கத்தின் வழிகாட்டுதலை பின்பற்றி அமைத்துக் கொள்ளுங்கள். வளரும் பிள்ளைகளுக்கு அறிவூட்டி ஆற்றல்படுத்தி அதிகாரப்படுத்துதல் ஒன்றே உம்மத்தின் சமூக அரசியல் நெருக்கடிகளுக்கான நிலையான தீர்வு.
Read More
தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கத்தின் சார்பில் 12 ஆம் வகுப்பு தேர்வெழுதிய மாணவர்களுக்கான தலைமைத்துவ பயிலரங்கம் ஏப்ரல் 29 – மே 14 வரை (15 நாட்கள்) புதுச்சேரி பைத்துல் ஹிக்மா வளாகத்தில் நடைபெற உள்ளது. இஸ்லாமிய வணக்க வழிபாடுகளில் பேணுதலுடைய, உயர்கல்வியிலும் வாழ்விலும் மிகச்சரியான இலக்குடைய மாணவ சமூகம் உருவாக வேண்டும் என்பதே இப் பயிலரங்கத்தின் நோக்கம். இடவசதி குறைவாக இருப்பதால் உடன் முன்பதிவு செய்து கொள்ளுங்கள்.
Read More
தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கத்தின் சார்பில் கல்விச் சிந்தனையாளர்களை உருவாக்கும் இரண்டுநாள் பயிலரங்கம் பைத்துல் ஹிக்மாவில் நடைபெற்றது. முஸ்லிம் உம்மத்துக்கு 6 துறைகளில் பயிற்சியளிக்கும் சிறப்பு பயிற்சியாளர்களை (Trainers) உருவாக்குவதே இந்த பயிலரங்கின் நோக்கம். இஸ்லாமிய கல்வி வரலாற்றுப் பயிற்சியாளர் (Islamic Educational History Trainer) உயர்கல்வி வழிகாட்டி (Career Counselor) அறிவியல் ஆலோசகர் (Scientifc Counselor) தொழில் பயிற்சியாளர் (Business Coach) இயற்கை வாழ்வியல் பயிற்சியாளர் (Lifestyle Trainer) முனைப்படுத்தும் சொற்பொழிவாளர் (Motivational Speaker) பட்டதாரிகள்...
Read More
1 2 3 4