Admin

By

இஸ்லாமிய மார்க்க கல்வியை முறைப்படி கற்ற ஆலிம்களை சட்டம் ஆட்சிப்பணி இதழியல் தொழில் ஆகியத் துறைகளின் ஆளுமைகளாக உருவாக்கும் ஒற்றை இலக்குடன் உருவாக்கப்பட்டுள்ள புதுச்சேரி ஜாமிஅத்துல் ஹிக்மா அரபிக் கல்லூரியின் 5 ஆம் ஆண்டு நிறைவு விழா சிறப்பாக நடைபெற்றது. ஜாமிஆவின் இஸ்லாமிய பாடத்திட்ட குழு ஒருங்கிணைப்பாளர் மெளலவி யூசுஃப் சித்திக் மிஸ்பாஹி அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்கள். கூர்மையான இலக்கும் தொய்வில்லாத பயிற்சியுமே நம் பிள்ளைகளை ஆற்றல்படுத்தும் காரணிகள்.
Read More
புதுச்சேரி – கடுவனுர்,பைத்துல் ஹிக்மா வளாகத்தில் இயங்கிவரும் ஜாமிஅத்துல் ஹிக்மா அரபிக் கல்லூரியின் 2023 -24 கல்வியாண்டுக்கான விண்ணப்பங்கள் ஜனவரி 15 முதல் 25 வரை 10 நாட்கள் (காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டும்) வழங்கப்பட உள்ளன. 7 ஆண்டுகள் மதரஸா பாடத்தில் ஆலிமியத் படிப்புடன் மத்திய NIOS வாரியத்தில் பள்ளி இறுதித்தேர்வு எழுதும் விருப்பமுள்ள 12 வயதை தாண்டாத ஆண் பிள்ளையை சேர்க்க விரும்பும் பெற்றோர்கள் மாணவருடன் நேரில்...
Read More
புதுச்சேரி பைத்துல் ஹிக்மா வளாகத்தில் அமைந்துள்ள ஜாமிஅத்துல் ஹிக்மா அரபிக் கல்லூரியில் National Constitution Day நிகழ்ச்சி நடைபெற்றது. மார்க்க கல்வியில் வளர்ந்து வரும் இந்த குட்டி உலமாக்கள் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் உருவாக்கம், நோக்கம், பிரிவுகள், குடிமக்களின் உரிமைகள், குறித்தெல்லாம் மிக அருமையாக உரையாற்றினர். Constituent Assembly Preamble Sovereignty Liberty Equality Fraternity Democracy Human Rights இவையெல்லாம் 12,13 வயது அரபிக்கல்லூரி மாணவர்கள் மிக சரளமாக பயன்படுத்திய ஆங்கில சொற்கள். மார்க்கக் கல்வி...
Read More
புதுச்சேரி பைத்துல் ஹிக்மா வளாகத்தில் அமைந்துள்ள ஜாமிஅத்துல் ஹிக்மா அரபிக் கல்லூரியில் சுதந்திர இந்தியாவின் முதல் கல்வி அமைச்சர் மௌலானா அபுல் கலாம் ஆசாத் அவர்களின் நினைவாக தேசிய கல்வி தினம் (National Education Day) கருத்தரங்கம் மிகச் சிறப்பாக நடைபெற்றது. இக் கருத்தரங்கில் மௌலானா அபுல் கலாம் ஆசாத் அவர்களின் வாழ்க்கை வரலாறு குறித்தும்,கல்வி அமைச்சராக அவர்களின் பணிகள் குறித்தும், காங்கிரஸ் பேரியக்கத்தின் தேசியத் தலைவராக மெளலானா அவர்கள் ஆற்றிய சமூக சீரமைப்புகள் குறித்தும் ஜாமிஅத்துல்...
Read More
பைத்துல் ஹிக்மா வளாகத்தில் United Nations Day – 2022 விழா நடைபெற்றது. ஜாமிஅத்துல் ஹிக்மா அரபிக் கல்லூரியில் 7 ஆண்டுகள் ஆலிமியத் படிக்கும் மாணவர்கள் பல நாடுகளின் முகவர்களாக அமர்ந்து “காலநிலை மாற்றம் (Climate Change)” என்ற தலைப்பில் தங்களது கருத்துக்களை முன்வைத்து விவாதித்தனர். பிற கல்வி நிறுவனங்கள் மாணவர்களை ” படிக்க வைத்துக் கொண்டிருக்கின்றன “. பைத்துல் ஹிக்மா நிறுவனம் மாணவர்களை “உருவாக்கிக் கொண்டிருக்கிறது”.
Read More
இன்றைய உலகில்,தொழில் ஈடுபாடும் தேடலும் உள்ள ஒரு மனிதனால் தன் தொழில் வளர்ச்சிக்கான அறிவையும் வழிகாட்டுதலையும் மிக எளிதாக பெற்றுக் கொள்வதற்கு ஏராளமான வாய்ப்புகள் இருக்கிறது. ஆனால் அறிவைக் காட்டிலும் அவனது குணமும் அணுகுமுறையும் தொலைநோக்கு இலக்கும் தான் தொழில் வெற்றிக்கான அடிப்படை காரணிகளாக இருக்கின்றன. வணிக சாம்ராஜ்யம் என்ற தலைப்பில் உம்மத்தில் படித்த இளைஞர்கள் மற்றும் இளம் தொழில்முனைவோருக்கு இஸ்லாமிய வணிக உளவியல் மற்றும் இலாபகரமான நவீன உற்பத்தி தொழில்கள் குறித்தும் பயிற்சியளிக்கும் இரண்டு நாள்...
Read More
தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கத்தின் ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் புதுச்சேரி பைத்துல் ஹிக்மா வளாகத்தில் 28-8-22 ஞாயிற்றுக் கிழமை நடைபெற்றது. ” தமிழக முஸ்லிம்களின் ஆரம்பக்கல்வி முதல் ஆய்வுக்கல்வி வரை இஸ்லாமியப் பாடங்கள் இணைக்கப்பட வேண்டும் “ இந்த தொலைநோக்கு இலக்கை மையப்படுத்தி கல்வி பொருளாதாரம் ஆகிய இரண்டு தளங்களில், அதன் வேர்களிலும் கிளைகளிலும் சமூகத்தை அதிகாரப்படுத்தும் பெரும் பணியினை தன்னார்வத்துடன் செய்து வருகிறோம். ஆராவாரமில்லாத, அருள்நிறைந்த இந்தப் பணிகளில் தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கத்துடன் இணைந்து...
Read More
தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கம் ஏற்பாடு செய்திருந்த சட்டக்கல்லூரி மாணவர்கள் மற்றும் இளம் வழக்கறிஞர்களுக்கான இரண்டு நாள் பயிலரங்கம் பைத்துல் ஹிக்மா வளாகத்தில் நடைபெற்றது. என்னுடைய வகுப்புடன்…. மேனாள் நீதிபதி ஜியாவுதீன் மௌலவி முஹம்மது மீரான் தாவூதி வழக்கறிஞர் பா.ப.மோகன் வழக்கறிஞர் ராஜிவ்காந்தி வழக்கறிஞர் வெற்றிச்செல்வன் வழக்கறிஞர் ஆசிக் வழக்கறிஞர் முஹம்மது சாஜித் நத்வி ஆகியோர் வகுப்பெடுத்தனர். சாதாரண வழக்கறிஞர் என்ற தகுதியோடு நின்றுவிடாமல் சர்வதேச வழக்கறிஞர் அல்லது சட்டத்துறை ஆராய்ச்சியாளர் என்ற உயர்தகுதியை மாணவர்களுக்கான வாழ்நாள்...
Read More
சட்டக்கல்வி என்பது ஒரு தொழில்முறை படிப்பு (Professional Course) என்பதோடு முடிந்து விடுவதில்லை. ஜனநாயக மரபை கடைபிடிக்கும் சமூக அரசியல் போராளிகளை பேராற்றல்படுத்தும் மிகக் கூர்மையான ஆயுதம் அது. சட்டக்கல்வியில் நுண்ணறிவும் போராட்ட குணமும் கொண்ட மாணவன் உலகின் நீதியாளனாக உயர்ந்து நிற்பான் என்பது உறுதி. சட்டக்கல்வி மாணவர் மற்றும் இளம் வழக்கறிஞர்களுக்கான இரண்டுநாள் பயிலரங்கம் ஜூலை 16,17 ஆகிய தேதிகளில் பைத்துல் ஹிக்மாவில் இயங்கி வரும் மகாத்மா காந்தி IAS அகாடமியில் நடைபெற உள்ளது. தங்களை...
Read More
1 2 3 4