Events baithul hikma

Category

தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கத்தின் சார்பில் அடுத்த தலைமுறை பிள்ளைகளுக்கு உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி ரீதியாக இலக்கு நிர்ணயிக்கும் தலைமைத்துவ பயிலரங்கம் பைத்துல் ஹிக்மாவில் துவங்கியது. வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத வகையில் கவனச்சிதைவுக்கு உள்ளாக்கப்படும் இன்றைய இளம் தலைமுறையை ஒரு உயர்வான இலக்கை நோக்கி கூர்மைப்படுத்துவது பெரும் சவாலாக இருக்கிறது. ஆன்மிகப் பின்புலத்திலான உயர்கல்வியும் ஆராய்ச்சியும் தான் முஸ்லிம் உம்மத்தை அதிகாரப்படுத்தும் என்பதை இவர்கள் புரிந்து கொண்டால் மகத்தான மாற்றங்கள் உண்டாகும்.
Read More
முஸ்லிம் சமுதாயத்தில் யார் உருவாக வேண்டும் என்று கடந்த 25 ஆண்டுகளாக இடைவிடாமல் வலியுறுத்தி வருகிறோமோ, அவர்கள் தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கம் நடத்தும் ஜாமிஅத்துல் ஹிக்மா அரபிக் கல்லூரியிலிருந்து ஆரவாரமின்றி உருவாகி வருகின்றனர். அல்ஹம்துலில்லாஹ்… இந்த பயணம் அமைதியாக இருந்தாலும், அதன் பலன் ஆழமாக சமூகத்தில் பதிந்து வருகிறது. அறிவு, ஒழுக்கம் மற்றும் சமூகப் பொறுப்பு ஆகியவற்றை ஒருங்கிணைத்த தலைமுறையை உருவாக்கும் இந்த முயற்சி பாராட்டத்தக்கது. இன்னும் வெகுதூரம் கடக்க வேண்டியுள்ளது. நமது இலக்குகள் பெரியவை;...
Read More
ஜாமிஅத்துல் ஹிக்மா அரபிக் கல்லூரியில் “ஆலிம் அல் ஹிக்மி” பட்டம் பெற்ற ஆலிம்கள் அர்த்தமுள்ள உறுதிமொழியை எடுத்துக்கொண்டனர்.இஸ்லாமிய அறிவை உண்மையுடனும் நேர்மையுடனும் சமூகத்திற்கு பரப்புவோம் என்று அவர்கள் உறுதி மொழி எடுத்தனர்.மார்க்கப் பணியை பொறுப்புடனும் தாழ்மையுடனும் மேற்கொள்வோம் என வாக்குறுதி அளித்தனர்.சமூக ஒற்றுமை, நல்லொழுக்கு மற்றும் மனிதநேய மதிப்புகளை நிலைநிறுத்த பாடுபடுவோம் என தெரிவித்தனர்.இளைஞர்களை நல்வழிப்படுத்தும் பணியில் தொடர்ந்து ஈடுபடுவோம் என்று உறுதியளித்தனர்.அறிவை மட்டுமல்ல, நல்ல நடைமுறையையும் முன்னுதாரணமாக காட்டுவோம் என கூறினர்.மத நல்லிணக்கத்தையும் சமூக சமாதானத்தையும்...
Read More
இந்த உரையில் CMN சலீம் அவர்கள், நோன்பு மாதம் தமிழக முஸ்லிம்களின் சமூக வாழ்வில் ஏற்படுத்தும் அழகிய மாற்றங்களை எடுத்துரைக்கிறார்.நோன்பு என்பது வெறும் பட்டினி இருப்பதல்ல; அது தன்னடக்கம், கருணை மற்றும் இறைநம்பிக்கையை வளர்க்கும் ஒரு பயிற்சி என அவர் கூறுகிறார்.இஃப்தார் நேரங்களில் மக்கள் ஒன்றுகூடி உணவு பகிர்ந்து கொள்வது, சகோதரத்துவத்தின் அழகிய வெளிப்பாடாகும் என வலியுறுத்துகிறார்.மசூதிகள் மற்றும் வீடுகளில் நடைபெறும் இந்த கூடுகைகள் சமூக ஒற்றுமையை வலுப்படுத்துகின்றன.பெருமையும் பாசமும் கலந்த இந்த மரபுகள் தமிழக முஸ்லிம்களின்...
Read More
முஸ்லிம் சமுதாயத்தில் யார் உருவாக வேண்டும் என்று கடந்த 25 ஆண்டுகளாக இடைவிடாமல் வலியுறுத்தி வருகிறோமோ,அந்த தலைமுறையினர் இன்று தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கம் நடத்தும் ஜாமிஅத்துல் ஹிக்மா அரபிக் கல்லூரியிலிருந்துஆரவாரமின்றி, அமைதியாக உருவாகி வருகின்றனர். அல்ஹம்துலில்லாஹ்… இது ஒரு தொடக்கம் மட்டுமே. இன்னும் வெகுதூரம் நாம் கடக்க வேண்டியுள்ளது.இலக்கு நிர்ணயிக்கப்பட்ட உயர்கல்வி, ஆராய்ச்சி மற்றும் அறிவுசார் பணிகளின் மூலமேமுஸ்லிம் சமூகத்தின் நிலையை உண்மையாக மாற்றி அமைத்திட முடியும். எனவே சகோதரர்களே, சகோதரிகளே,தயவுசெய்து துஆ செய்யுங்கள்.மேலும் உங்கள்...
Read More
ஷரீஅத்தை முறைப்படி கற்ற ஆலிம்களை சட்ட வல்லுனர்களாகவும், இந்திய ஆட்சிப்பணிக்கும் இடைவெளியின்றி உருவாக்க வேண்டும் என்ற உயர்வான இலக்குடன், தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கம் புதுச்சேரி மாநிலம் கடுவனூரில் கட்டமைத்து வரும் பைத்துல் ஹிக்மா கல்வி வளாகத்தின் முதல் நிறுவனமான ஜாமிஅத்துல் ஹிக்மா அரபிக் கல்லூரியின் முதலாவது பட்டமளிப்பு விழா பிப். 1 அன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் தமிழ்மாநில ஜமாஅத்துல் உலமாவின் ஆளுமை மிக்க தலைவர் மௌலானா P.A. காஜா மொயீனுத்தீன் பாக்கவி அவர்கள் மற்றும் மேனாள்...
Read More
தமிழக முஸ்லிம்களிடையே முதன்முறையாக இஸ்லாமிய நிதியியல் மற்றும் ஹலால் பங்குச்சந்தை முதலீடுகள் குறித்த ஒருநாள் வகுப்பு பைத்துல் ஹிக்மாவில் நடைபெற்றது. இந்திய பங்குச் சந்தையில் ஷரீஅத் வகைக்கு உட்பட்ட பங்குகளை எதன் அடிப்படையில் தரம் பிரிப்பது,அதற்கு அறிஞர்களின் வழிகாட்டுதல் என்ன என்பது குறித்து மெளலவி உமர் ஹஸனி அவர்கள் வகுப்பெடுத்தார்கள். முதலீடுகள்,நிதி மேலாண்மை,அதற்கான திட்டமிடல் குறித்து நிதித்துறை வல்லுனர் சகோதரர் இம்தியாஸ் அவர்கள் வகுப்பெடுத்தார்கள். சவூதி அரேபிய பங்குச் சந்தையில் முதலீடு செய்யும் வழிமுறைகள் குறித்து சவூதி...
Read More
இன்றைய முஸ்லிம் சமூகத்தி்ன் பொருளாதார வளர்ச்சிக்கு இஸ்லாமிய நிதியியல் (Islamic Finance) படிப்பும் அதில் ஆராய்ச்சியும் மிகவும் அவசியமாக இருக்கிறது. இந்த படிப்பு தமிழக பல்கலைக்கழகங்களில் இல்லை. அரபுநாடுகள் மலேசியா இந்தோனேசியா அமெரிக்க ஐரோப்பிய நாடுகளில் ஏராளமானவர்கள் இஸ்லாமிய நிதியியல் துறையில் பட்டம் பெற்று ஆராய்ச்சிப் படிப்பை முன்னெடுத்து வருகின்றனர். இந்திய மற்றும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு ஹலால் முதலீடுகள் மற்றும் பங்கு வர்த்தகம் குறித்த ஆலோசனைகளை அவர்கள் தான் வழங்குகின்றனர். இந்திய பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள 54 %...
Read More
புதுச்சேரி பைத்துல் ஹிக்மா வளாகத்தில் இயங்கிவரும் ஜாமிஅத்துல் ஹிக்மா அரபிக் கல்லூரியில் தேசிய அரசியலமைப்பு தினம் (National Constitution Day) விழா நடைபெற்றது. இந்திய அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கிய அரசியல் நிர்ணய சபையில் நடைபெற்ற முக்கிய விவாதங்களை ஆலிமியத் கல்வி பயிலும் மாணவர்கள் அப்படியே காட்சிப்படுத்தினர். மாதிரி நீதிமன்றமும் (Moot Court ) நடைபெற்றது. மூன்று வழக்கறிஞர்கள் நீதிபதிகளாக அமர்ந்திருக்க மாணவர்கள் இரண்டு முக்கிய வழக்குகளை எடுத்து விவாதித்தனர். Aalim + Advocate என்பது தான் ஜாமிஅத்துல்...
Read More
இஸ்லாமியக் கல்விமுறை வரலாறு கலாச்சார மரபுகள் உள்ளிட்டவற்றின் பின்புலத்தில் இன்றைய முஸ்லிம்களுக்கான இலக்கு குறித்து துல்லியமாக அறிந்த கல்வியாளர்களை மஹல்லாக்கள் தோறும் உருவாக்கும் பயிலரங்கம் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன. தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கம் சார்பில் ” இஸ்லாமிய நாகரிகம் ” என்ற தலைப்பில் இரண்டுநாள் பயிலரங்கம் புதுச்சேரி பைத்துல் ஹிக்மாவில் நடைபெற்றது. கல்விப் பணிகளின் மூலமாக மட்டுமே முஸ்லிம்களை அதிகாரப்படுத்த முடியும். அறிவுத்தேடல் ஆராய்ச்சி செய்தல் புதிய கண்டுபிடிப்புகள் உள்ளிட்ட அறிவுசார் முயற்சிகள் மீது ஈர்ப்பு...
Read More
1 2 3 6

Recent Comments