Events baithul hikma

Category

புதுச்சேரி பைத்துல் ஹிக்மா வளாகத்தில் அமைந்துள்ள ஜாமிஅத்துல் ஹிக்மா அரபிக் கல்லூரியில் சுதந்திர இந்தியாவின் முதல் கல்வி அமைச்சர் மௌலானா அபுல் கலாம் ஆசாத் அவர்களின் நினைவாக தேசிய கல்வி தினம் (National Education Day) கருத்தரங்கம் மிகச் சிறப்பாக நடைபெற்றது. இக் கருத்தரங்கில் மௌலானா அபுல் கலாம் ஆசாத் அவர்களின் வாழ்க்கை வரலாறு குறித்தும்,கல்வி அமைச்சராக அவர்களின் பணிகள் குறித்தும், காங்கிரஸ் பேரியக்கத்தின் தேசியத் தலைவராக மெளலானா அவர்கள் ஆற்றிய சமூக சீரமைப்புகள் குறித்தும் ஜாமிஅத்துல்...
Read More
பைத்துல் ஹிக்மா வளாகத்தில் United Nations Day – 2022 விழா நடைபெற்றது. ஜாமிஅத்துல் ஹிக்மா அரபிக் கல்லூரியில் 7 ஆண்டுகள் ஆலிமியத் படிக்கும் மாணவர்கள் பல நாடுகளின் முகவர்களாக அமர்ந்து “காலநிலை மாற்றம் (Climate Change)” என்ற தலைப்பில் தங்களது கருத்துக்களை முன்வைத்து விவாதித்தனர். பிற கல்வி நிறுவனங்கள் மாணவர்களை ” படிக்க வைத்துக் கொண்டிருக்கின்றன “. பைத்துல் ஹிக்மா நிறுவனம் மாணவர்களை “உருவாக்கிக் கொண்டிருக்கிறது”.
Read More
இன்றைய உலகில்,தொழில் ஈடுபாடும் தேடலும் உள்ள ஒரு மனிதனால் தன் தொழில் வளர்ச்சிக்கான அறிவையும் வழிகாட்டுதலையும் மிக எளிதாக பெற்றுக் கொள்வதற்கு ஏராளமான வாய்ப்புகள் இருக்கிறது. ஆனால் அறிவைக் காட்டிலும் அவனது குணமும் அணுகுமுறையும் தொலைநோக்கு இலக்கும் தான் தொழில் வெற்றிக்கான அடிப்படை காரணிகளாக இருக்கின்றன. வணிக சாம்ராஜ்யம் என்ற தலைப்பில் உம்மத்தில் படித்த இளைஞர்கள் மற்றும் இளம் தொழில்முனைவோருக்கு இஸ்லாமிய வணிக உளவியல் மற்றும் இலாபகரமான நவீன உற்பத்தி தொழில்கள் குறித்தும் பயிற்சியளிக்கும் இரண்டு நாள்...
Read More
தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கத்தின் ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் புதுச்சேரி பைத்துல் ஹிக்மா வளாகத்தில் 28-8-22 ஞாயிற்றுக் கிழமை நடைபெற்றது. ” தமிழக முஸ்லிம்களின் ஆரம்பக்கல்வி முதல் ஆய்வுக்கல்வி வரை இஸ்லாமியப் பாடங்கள் இணைக்கப்பட வேண்டும் “ இந்த தொலைநோக்கு இலக்கை மையப்படுத்தி கல்வி பொருளாதாரம் ஆகிய இரண்டு தளங்களில், அதன் வேர்களிலும் கிளைகளிலும் சமூகத்தை அதிகாரப்படுத்தும் பெரும் பணியினை தன்னார்வத்துடன் செய்து வருகிறோம். ஆராவாரமில்லாத, அருள்நிறைந்த இந்தப் பணிகளில் தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கத்துடன் இணைந்து...
Read More
தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கம் ஏற்பாடு செய்திருந்த சட்டக்கல்லூரி மாணவர்கள் மற்றும் இளம் வழக்கறிஞர்களுக்கான இரண்டு நாள் பயிலரங்கம் பைத்துல் ஹிக்மா வளாகத்தில் நடைபெற்றது. என்னுடைய வகுப்புடன்…. மேனாள் நீதிபதி ஜியாவுதீன் மௌலவி முஹம்மது மீரான் தாவூதி வழக்கறிஞர் பா.ப.மோகன் வழக்கறிஞர் ராஜிவ்காந்தி வழக்கறிஞர் வெற்றிச்செல்வன் வழக்கறிஞர் ஆசிக் வழக்கறிஞர் முஹம்மது சாஜித் நத்வி ஆகியோர் வகுப்பெடுத்தனர். சாதாரண வழக்கறிஞர் என்ற தகுதியோடு நின்றுவிடாமல் சர்வதேச வழக்கறிஞர் அல்லது சட்டத்துறை ஆராய்ச்சியாளர் என்ற உயர்தகுதியை மாணவர்களுக்கான வாழ்நாள்...
Read More
சட்டக்கல்வி என்பது ஒரு தொழில்முறை படிப்பு (Professional Course) என்பதோடு முடிந்து விடுவதில்லை. ஜனநாயக மரபை கடைபிடிக்கும் சமூக அரசியல் போராளிகளை பேராற்றல்படுத்தும் மிகக் கூர்மையான ஆயுதம் அது. சட்டக்கல்வியில் நுண்ணறிவும் போராட்ட குணமும் கொண்ட மாணவன் உலகின் நீதியாளனாக உயர்ந்து நிற்பான் என்பது உறுதி. சட்டக்கல்வி மாணவர் மற்றும் இளம் வழக்கறிஞர்களுக்கான இரண்டுநாள் பயிலரங்கம் ஜூலை 16,17 ஆகிய தேதிகளில் பைத்துல் ஹிக்மாவில் இயங்கி வரும் மகாத்மா காந்தி IAS அகாடமியில் நடைபெற உள்ளது. தங்களை...
Read More
12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கம் ஏற்பாடு செய்திருந்த 14 நாள் பயிலரங்கம் நிறைவுற்றது. உயிரியல் துறையில் ஆராய்ச்சிப் படிப்பை மேற்கொண்டு உணவு உற்பத்தியில் சாதிப்பதும், அதிதீவிர நோய்களுக்கு மருந்து கண்டுபிடித்து உயிரினங்களை காப்பதும் தான் அறிவியல் பிரிவு மாணவர்களுக்கான இலக்கு. இந்திய கல்வித் துறையிலும், சர்வதேச அளவில் பொதுக் கொள்கை (Public Policy) வகுப்பாளர்களாகவும், சட்டத் துறையின் சர்வதேச முன்னவர்களாகவும் உருவாது தான் கலைப்பிரிவு மாணவர்களுக்கான வாழ்நாள் இலக்கு. முஸ்லிம் பிள்ளைகள்...
Read More
இந்த 14 நாட்கள் பயிலரங்கம் உங்கள் பிள்ளைக்கு மிகச்சரியான இலக்கை பயிற்றுவிக்கும். அதற்காக துறைசார்ந்த அறிஞர்கள் நேரிலும், உலகின் பல்வேறு நாடுகளிலிருந்து வீடியோ கான்ஃபரன்ஸிங் மூலமாகவும் வகுப்பெடுக்க உள்ளனர். இஸ்லாமிய வரலாறு வகுப்பை நான் எடுக்க உள்ளேன். இந்த வழிகாட்டல் பயிலரங்கத்திற்கு ஆழமான சமூக கவலை மட்டுமே காரணமாக இருக்கிறது. 12 ஆம் வகுப்பு தேர்வெழுதும் மாணவர்களின் பெற்றோர்கள் இந்த வாய்ப்பை மிகச்சரியாக பயன்படுத்திக் கொள்வீர். குறைந்த எண்ணிக்கையிலான மாணவர்களுக்கே இடவசதி செய்யப்பட்டுள்ளதால் உடன் முன்பதிவு செய்து...
Read More
மார்க்க கல்வி படித்தவர்களை TNPSC / UPSC தேர்வுகளுக்கு தயார் செய்து அரசின் உயர் அதிகாரப் பொறுப்புகளுக்கு உருவாக்கும் சேவை நிறுவனமாக புதுச்சேரி பைத்துல் ஹிக்மா கட்டமைக்கப்பட்டு வருகிறது. தற்சமயம் ஜாமிஅத்துல் ஹிக்மா அரபிக் கல்லூரி மற்றும் மகாத்மா காந்தி ஸ்கூல் ஆப் சிவில் சர்வீஸ் என்ற IAS அகாடமியும் இயங்கி வருகிறது. இதல்லாமல் கல்வி மற்றும் தொழில் ரீதியான பல்வேறு பயிற்சி வகுப்புகள் பைத்துல் ஹிக்மாவில் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன. ஜாமிஅத்துல் ஹக்மா அரபிக் கல்லூரியின்...
Read More
அஸ்ஸலாமு அலைக்கும்….. தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கத்தின் சார்பில் பாண்டிச்சேரி பைத்துல் ஹிக்மா வளாகத்தில் இயங்கிவரும் ஜாமிஅத்துல் ஹிக்மா அரபிக் கல்லூரியின்  2022-23 (ஹிஜ்ரி -1443 – 1444)  கல்வி ஆண்டிற்கான விண்ணப்பங்கள் வரும் பிப்ரவரி 10 முதல் 20ஆம் தேதிவரை 10 நாட்களுக்கு வழங்கப்பட உள்ளன. கல்வி காலம் : 7 ஆண்டுகள். தகுதி : குர்ஆன் நன்கு ஓதத் தெரிந்திருக்க வேண்டும்.5-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.  தகுதித்தேர்வின் அடிப்படையிலேயே மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்....
Read More
1 2 3 4 5 6

Recent Comments